Posts

குறள் : 349 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்.

குறள் : 349 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும். மு.வ உரை : இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும்  இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும். கலைஞர் உரை : பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும். சாலமன் பாப்பையா உரை : ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும். Kural 349 Patratra Kanne Pirapparukkum Matru Nilaiyaamai Kaanap Patum Explanation : At the moment in which desire has been abandoned  (other) births will be cut off; when that has not been done  instability will be seen

குறள் : 348 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்.

குறள் : 348 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். மு.வ உரை : முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர்  அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர். கலைஞர் உரை : அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள். சாலமன் பாப்பையா உரை : ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே. Kural 348 Thalaippattaar Theerath Thurandhaar Mayangi Valaippattaar Matrai Yavar Explanation : Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion  entangled in the net of (many) births

குறள் : 346 யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்.

குறள் : 346 யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும். மு.வ உரை : உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன்  தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். கலைஞர் உரை : யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான். சாலமன் பாப்பையா உரை : உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான். Kural 346 Yaan Enadhu Ennum Serukku Aruppaan Vaanorkku Uyarndha Ulakam Pukum Explanation : Shall enter realms above the powers divine

குறள் : 345 மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பும் மிகை.

குறள் : 345 மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பும் மிகை. மு.வ உரை : பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ. கலைஞர் உரை : பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?. சாலமன் பாப்பையா உரை : இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை?யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?. Kural 345 Matrum Thotarppaatu Evankol Pirapparukkal Utraarkku Utampum Mikai Explanation : What means the addition of other things those who are attempting to cut off (future) births  when even their body is too much (for them)

குறள் : 347 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு.

குறள் : 347 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. மு.வ உரை : யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை  துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. கலைஞர் உரை : பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன. சாலமன் பாப்பையா உரை : ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா. Kural 347 Patri Vitaaa Itumpaikal Patrinaip Patri Vitaaa Thavarkku Explanation : Sorrows will never let go their hold of those who give not up their hold of desire

குறள்: 343 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு

குறள்: 343 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு மு.வ உரை: ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும். சாலமன் பாப்பையா உரை: ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம். கலைஞர் உரை: ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும் Couplet: 'Perceptions of the five' must all expire;- Relinquished in its order each desire Explanation: Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired Transliteration: Atalventum Aindhan Pulaththai Vitalventum Ventiya Vellaam Orungu

குறள்: 342 வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல

குறள்: 342 வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல மு.வ உரை: துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல. சாலமன் பாப்பையா உரை: பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க. கலைஞர் உரை: ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும் Couplet: 'Renunciation' made- ev'n here true pleasures men acquire; 'Renounce' while time is yet, if to those pleasures you aspire Explanation: After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon (the world) Transliteration: Ventin Un Taakath Thurakka Thurandhapin Eentuiyar Paala Pala

குறள்: 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன்

குறள்: 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன் மு.வ உரை: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. சாலமன் பாப்பையா உரை: எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான். கலைஞர் உரை: ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை Couplet: From whatever, aye, whatever, man gets free, From what, aye, from that, no more of pain hath he Explanation: Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain Transliteration: Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal Adhanin Adhanin Ilan

குறள்: 340 புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சி லிருந்த உயிர்க்கு

குறள்: 340 புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சி லிருந்த உயிர்க்கு மு.வ உரை: (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ. சாலமன் பாப்பையா உரை: உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்! கலைஞர் உரை: உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது Couplet: The soul in fragile shed as lodger courts repose:- Is it because no home's conclusive rest it knows Explanation: It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home Transliteration: Pukkil Amaindhindru Kollo Utampinul Thuchchil Irundha Uyirkku

குறள்: 339 உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு

குறள்: 339 உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு மு.வ உரை: இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. சாலமன் பாப்பையா உரை: உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு. கலைஞர் உரை: நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு Couplet: Death is sinking into slumbers deep; Birth again is waking out of sleep Explanation: Death is like sleep; birth is like awaking from it Transliteration: Urangu Vadhupolunj Chaakkaatu Urangi Vizhippadhu Polum Pirappu

குறள்: 338 குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு

குறள்: 338 குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு மு.வ உரை: உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே. கலைஞர் உரை: உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான் Couplet: Birds fly away, and leave the nest deserted bare; Such is the short-lived friendship soul and body share Explanation: The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty Transliteration: Kutampai Thaniththu Ozhiyap Pulparan Thatre Utampotu Uyiritai Natpu

குறள்: 337 ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல

குறள்: 337 ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல மு.வ உரை: அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள். சாலமன் பாப்பையா உரை: உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உ‌டம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர். கலைஞர் உரை: ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள் Couplet: Who know not if their happy lives shall last the day, In fancies infinite beguile the hours away Explanation: Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment Transliteration: Orupozhudhum Vaazhvadhu Ariyaar Karudhupa Kotiyum Alla Pala

குறள்: 336 நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு

குறள்: 336 நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு மு.வ உரை: நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம். சாலமன் பாப்பையா உரை: நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம். கலைஞர் உரை: இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும் Couplet: Existing yesterday, today to nothing hurled!- Such greatness owns this transitory world Explanation: This world possesses the greatness that one who yesterday was is not today Transliteration: Nerunal Ulanoruvan Indrillai Ennum Perumai Utaiththuiv Vulaku

குறள்: 335 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யாப் படும்

குறள்: 335 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யாப் படும் மு.வ உரை: நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும். சாலமன் பாப்பையா உரை: நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும். கலைஞர் உரை: வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும் Couplet: Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath, Arouse thyself, and do good deeds beyond the power of death Explanation: Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silent Transliteration: Naachchetru Vikkulmel Vaaraamun Nalvinai Mersendru Seyyap Patum

குறள்: 334 நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின்

குறள்: 334 நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின் மு.வ உரை: வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது. சாலமன் பாப்பையா உரை: நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும். கலைஞர் உரை: வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள் Couplet: As 'day' it vaunts itself; well understood, 'tis knife', That daily cuts away a portion from thy life Explanation: Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life Transliteration: Naalena Ondrupor Kaatti Uyir Eerum Vaaladhu Unarvaarp Perin

குறள்: 333 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்

குறள்: 333 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் மு.வ உரை: செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும். சாலமன் பாப்பையா உரை: நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க. கலைஞர் உரை: நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும் Couplet: Unenduring is all wealth; if you wealth enjoy, Enduring works in working wealth straightway employ Explanation: Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable Transliteration: Arkaa Iyalpitruch Chelvam Adhupetraal Arkupa Aange Seyal

குறள்: 332 கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அருவிளிந் தற்று

குறள்: 332 கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அருவிளிந் தற்று மு.வ உரை: பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது. சாலமன் பாப்பையா உரை: நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும். கலைஞர் உரை: சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும் Couplet: As crowds round dancers fill the hall, is wealth's increase; Its loss, as throngs dispersing, when the dances cease Explanation: The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly Transliteration: Kooththaattu Avaik Kuzhaath Thatre Perunjelvam Pokkum Adhuvilin Thatru

குறள்: 331 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்

குறள்: 331 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் மு.வ உரை: அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும். சாலமன் பாப்பையா உரை: அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும். கலைஞர் உரை: எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும் Couplet: What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill Explanation: Never to destroy life is the sum of all virtuous conduct The destruction of life leads to every evil Transliteration: Aravinai Yaadhenin Kollaamai Koral Piravinai Ellaan Tharum

குறள்: 330 உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்

குறள் : 330 உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர் மு.வ உரை: நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர். சாலமன் பாப்பையா உரை: நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர். கலைஞர் உரை: வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர் Couplet: Who lead a loathed life in bodies sorely pained, Are men, the wise declare, by guilt of slaughter stained Explanation: (The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth) Transliteration: Uyir Utampin Neekkiyaar Enpa Seyir Utampin Sellaaththee Vaazhkkai Yavar

குறள்: 329 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து

குறள்: 329 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து மு.வ உரை: கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர். சாலமன் பாப்பையா உரை: கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார். கலைஞர் உரை: பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும் Couplet: Whose trade is 'killing', always vile they show, To minds of them who what is vileness know Explanation: To minds of them who what is vileness know Transliteration: Kolaivinaiya Raakiya Maakkal Pulaivinaiyar Punmai Therivaa Rakaththu